கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக குள்ளமானவர்...!!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக குள்ளமானவர்...!!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக குள்ளமானவர்...!!
X

நேபாளத்தைச் சேர்ந்தவர் டோர் பகதூர் கபாங்கி. 2 அடி 5 அங்குலம் (73 செ.மீ) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பிறந்த இவர், சிந்துலி மாவட்டத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். தற்போது அவர் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

Nepal-smallest-man

இதுகுறித்து அவரது சகோதரர் நாரா பகதூர் கபாங்கி கூறும்போது, “எனது சகோதரர் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மேலும், “டோர் பகதூர் பிறக்கும் போது நன்றாகவே இருந்தார். இருப்பினும், அவர் ஏழு வயதிலிருந்து வளரவில்லை. அவரது நண்பர் வளர்ந்தார்கள், ஆனால் டோர் பகதூர் வளரவில்லை. ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

இருப்பினும், கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்படுவது கபாங்கியின் கல்விக்கு உதவும் என்று அவரது சகோதரர் நாரா பகதூர் கபாங்கி நம்புகிறார்.

smallest-women-jyoti

முன்னதாக, மிகக் குறைவான வயதுடைய இளைஞன் என்று ககேந்திர தாபா மகார் என்பவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு காலமானார். மேலும், உலகிலேயே உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த ஜோதி அம்கே தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it