Theme Check

உலகின் மிக பெரிய பேனாவை உருவாக்கி இந்தியர் கின்னஸ் சாதனை..!!

உலகின் மிக பெரிய பேனாவை உருவாக்கி இந்தியர் கின்னஸ் சாதனை..!!

உலகின் மிக பெரிய பேனாவை உருவாக்கி இந்தியர் கின்னஸ் சாதனை..!!
X

ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை இந்த பேனா முறியடித்து உள்ளது. இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு உள்ளது.

அதனுடன், விதிமுறைகளின்படி இந்த பேனாவின் முனையில் இருந்து, எழுதும்போது மை வெளியே வருகிறது என அதன் செயல்பாடு பற்றியும் தெரிவித்து உள்ளது. அதுபற்றி வெளியிடப்பட்ட வீடியோவில், சீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து அந்த பேனாவை பயன்படுத்தி படங்களை வரைகின்றார்.

Tags:
Next Story
Share it