ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 3 கின்னஸ் சாதனை படைத்த பெண்..!

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 3 கின்னஸ் சாதனை படைத்த பெண்..!

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 3 கின்னஸ் சாதனை படைத்த பெண்..!
X

வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்ட ருமேசா கெல்கி (வயது 24) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை பெற்றவர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் 215.16 செ.மீ. ( 7 அடி 7 அங்குலம்) உயரம் கொண்டவர். இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை பெற்றார்.

1

இந்த நிலையில், தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் ருமேசா. அதாவது உலகின் மிக நீளமான விரல் (11.2 செ.மீ ) கொண்ட பெண் என்ற சாதனையும், உலகின் மிகப்பெரிய கைகள் உடைய பெண் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். அவரது வலது கை 24.93 செ.மீ. (9.81 அங்குலம்) மற்றும் இடது கை அளவு 24.26 செ.மீ. (9.55 அங்குலம்) கொண்டதாக உள்ளது.

உலகின் நீண்ட முதுகு 59.90 செ.மீ. (23.58 அங்குலம்) உடைய பெண் என்பதற்காகவும் தற்போது இவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it