குஜராத் கேப்டன் பாண்டியாவுக்கு வந்த சோதனை.. உடற்தகுதியை நிரூபிக்க 10 ஓவர் பந்துவீச கெடு !
குஜராத் கேப்டன் பாண்டியாவுக்கு வந்த சோதனை.. உடற்தகுதியை நிரூபிக்க 10 ஓவர் பந்துவீச கெடு !

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து இருப்பது ஐபிஎல் தொடர் தான். இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லையென்பதால், அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் புதிதாக ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர், காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி, அவர் தனது சக வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அவர், ஐபிஎல் தொடருக்கு முன் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) உடற்தகுதியை நிரூபிக்க பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. என்சிஏ பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் அகாடமி தலைவர் விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் உடற்தகுதி தேர்வு திட்டத்தை முடிவு செய்வார்கள்.
ஆனால் தேர்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளபடி, அவர் குறைந்தபட்சம் 10 ஓவர் பந்து வீச வேண்டும் மற்றும் யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சோதனையின் போது இந்திய அணியின் பிசியோ நிதின்படேலும் உடனிருப்பார்.
newstm.in

