ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி நிறுவனம் !!
ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி நிறுவனம் !!

ஹெச்டிஎப்சி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணையவுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமாக ஹெச்டிஎப்சி செயல்பட்டு வருகிறது. இதுபோலவே நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக ஹெச்டிஎப்சி செயல்பட்டு வருகிறது. மேலும் ஹெச்டிஎப்சி தனித்தனி பல்வேறு துறைகளில் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுமட்டுமின்றி வர்த்தக வளர்ச்சியும் தடை உள்ளிட்ட உபரி இழப்புகள் ஏற்படுவதாகவும், கருதி இந்த நிறுவனங்களை ஒன்றிணைக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

ஹெச்டிஎப்சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான சொத்துக்களும், ஹெச்டிஎப்சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. ஹெச்டிஎப்சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும் என்பதால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஹெச்டிஎப்சி நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, செபி மற்றும் பிற அரசு அமைப்புகள் ஒப்புதலுக்கு பின்பு இது முழுமையாக நடைமுறைக்கு வரும். ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் வர்த்தக உயர்வு பெற்றன.
newstm.in

