Theme Check

பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம்.. பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு..!

பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம்.. பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு..!

பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம்.. பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு..!
X

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளிக்கு நேரில் சென்ற மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவை சேர்ந்த வீரா என்ற வீராசாமி, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோருடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், மாணவர்களில் பலரும் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் வந்திருப்பது குறித்தும் ஆசிரியர்களிடம் விசாரித்தார். பலமுறை அறிவுறுத்தியும் மாணவர்கள் அவ்வாறு பள்ளிக்கு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோரிடம் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் வீரா, நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

பெற்றோரும் அதற்கு சம்மதித்ததால், முடிதிருத்துவோர் வரவழைக்கப்பட்டு, 300 மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், மாணவர்களின் கை, கால் நகங்களும் வெட்டப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த முயற்சிக்கு, ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோரும் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story
Share it