தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்.. பதிவிறக்கம் செய்ய லிங்க் வெளியீடு..!
தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்.. பதிவிறக்கம் செய்ய லிங்க் வெளியீடு..!

தமிழகத்தில், 10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மே மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு இன்று (20-ம் தேதி) ஹால் டிக்கெட் வெளியாகிறது.
அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம்.
மேலும், மே 2022 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Next Story

