+2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் ..!!

+2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் ..!!

+2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் ..!!
X

தமிழ்ழாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியாகியது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

govt-exam

இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகள் ஜூலை 25-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 27 முதல் ஜூலை 7-ம் தேதி வரை பெறப்பட்டது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

exam

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், http://dge.tn.gov.in இணையதளத்தில் இன்று பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it