Theme Check

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. திருப்பதிக்கு இனி இலவசமாக பயணிக்கலாம்..!

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. திருப்பதிக்கு இனி இலவசமாக பயணிக்கலாம்..!

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. திருப்பதிக்கு இனி இலவசமாக பயணிக்கலாம்..!
X

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், பக்தர்கள் திருப்பதி கோவிலுக்குச் செல்வதற்கு வசதியாக பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலிருந்து இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
வேலூா் - திருப்பதிக்கு தினமும் இலவச போக்குவரத்து சேவை- Dinamani
அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது; “முதல்வர் மு.க.ஸ்டாலினால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன். அடுத்த 19 மாதங்கள் வரை நான் இந்த பதவியில் இருப்பேன்.

அதுவரை, வாரத்திற்கு 6 நாட்கள் திருமலைக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து திரும்ப இலவச பேருந்து வசதியை என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன்.

இதற்காக, 12 பேர் பயணம் செய்யக்கூடிய வகையிலான புதிதாக வேன் ஒன்று வாங்கி உள்ளேன். இந்த சேவையானது இன்று (1-ம் தேதி) முதல் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வாகனத்தில் குறைந்த இருக்கைகள் வசதி இருப்பதால், ஒரு குடும்பத்தில் 1 அல்லது 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்கு முன்கூட்டியே வேலூர் திமுக அலுவலகத்தில் தங்களது ஆதார் விவரங்களை கொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த இலவச வாகன சேவை வேலூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it