இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது..!
இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதன் முதல் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை, எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பே சமையல் எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.165 முதல் 178 வரை தற்போது விற்கப்படுகிறது.சில்லரை விற்பனையில் இதன் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.196 வரை விற்கப்படுகிறது. இதே போல பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.125-க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர் உயர்வில் இருந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,280-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ரூ.4,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,600 ரூபாய் குறைந்து ரூ.74,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.