Theme Check

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்பதிவு செய்வதில் இப்படி அம்சமா !!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்பதிவு செய்வதில் இப்படி அம்சமா !!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்பதிவு செய்வதில் இப்படி அம்சமா !!
X

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதை வேறு ஒருவருக்கு மாற்றும் வசதி உள்ளது.

ரயிலில் பயணம் செய்ய உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் இருந்து, ஏதேனும் காரணத்தால் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அதனை ரத்து செய்வோம். அல்லது அப்படியே விட்டுவிடுவோம். ஆனால், தற்போது இந்த டிக்கெட்டை நம் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கு மாற்ற இயலும் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம் என்ற வசதி தற்போது வந்துள்ளது.

சிலருக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்த பின் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அந்தப் பணமும் கிடைக்காமல் போகலாம். வேறு ஒருவருக்கு டிக்கெட் போட்டாலும் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைப்பது கடினம். அதனால்தான் ரயில் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே துறை வழங்கியுள்ளது.
train
ரயில் பயணிகளுக்கான டிக்கெட் மாற்றும் வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் மக்களுக்கு இது பற்றி தெரிவதில்லை. ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்குப் பதிலாக உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட்டை மாற்றலாம்.

ரயில் பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது பணிக்காகச் செல்கிறார் என்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் கோரிக்கை வைக்கலாம். இந்த டிக்கெட் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றப்படும். திருமணத்திற்கு செல்பவர்களாக இருந்தால் 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம்.
train
ரயில் டிக்கெட்களை மாற்றும் வசதி ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறொருவருக்கு ஒரு முறை மாற்றியிருந்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது. முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த வசதியை தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இந்தக் கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது.

எப்படி மாற்றுவது?

  • டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்ட்டருக்குச் செல்லவும்.
  • யாருடைய பெயருக்கு டிக்கெட் மாற்றப்பட வேண்டுமோ அவருடைய ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்லவும்.
  • டிக்கெட் பரிமாற்றத்திற்கு கவுண்ட்டரில் விண்ணப்பிக்கவும்.


newstm.in

Next Story
Share it