கடுமையான பயிற்சி.. களரி மாஸ்டர் திடீரென மயங்கி விழுந்து பலி !!
கடுமையான பயிற்சி.. களரி மாஸ்டர் திடீரென மயங்கி விழுந்து பலி !!

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். 29 வயதான இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் மாணவர்களுக்கு களறி பயிற்சி அளித்து வந்தார். தமிழகத்தின் பாரம்பரிய கலை என்பதால் இளைஞர்கள் பலரும் ஆர்முடன் இவரிடம் பயிற்சி அளித்து வந்தார்.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலில் களரிபயிற்சியை பதிவு செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரிதரன் ஆன்லைன் மூலம் தனது பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்தார். அவ்வாறு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த பயிற்சி மைய நிர்வாகிகள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் போலீசார் கிரிதரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெஞ்சுவலியால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

