Theme Check

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் அதிகரிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல் !!

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் அதிகரிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல் !!

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் அதிகரிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல் !!
X

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உலகம் முழுவதும் கோடிக்கக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஐடி கிரியேட் செய்து அதில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெறுப்புப் பதிவுகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

facebook

இது தொடர்பாக மெட்டா நிறுவனம் கூறியதாவது, சமூக வலைதளங்களில் வெறுப்பு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்பு பதிவுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 38% அதிகம் என்றும் மார்ச்சில் பேஸ்புக்கில் 38,600 வெறுப்புப் பதிவுகள் கண்டறியப்பட்டன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

facebook

அதேபோல் இன்ஸ்டாகிராமில் வன்முறைப் பதிவுகளின் எண்ணிக்கை 86% அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் 41,300 வன்முறை பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஏப்ரலில் அது 77,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான பதிவுகள், பயனாளர்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே கண்டறியப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.

வெறுப்புப் பதிவுகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.


newstm.in

Next Story
Share it