Theme Check

நடிகை உடம்பில் மச்சங்களை எண்ணி விட்டீர்களா..? - கேள்வியால் அதிர்ந்த நடிகர் !!

நடிகை உடம்பில் மச்சங்களை எண்ணி விட்டீர்களா..? - கேள்வியால் அதிர்ந்த நடிகர் !!

நடிகை உடம்பில் மச்சங்களை எண்ணி விட்டீர்களா..? - கேள்வியால் அதிர்ந்த நடிகர் !!
X

கொரோனா பரவல் குறைந்து வருவதால் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திரைத்துறையும் சுறுசுறுப்படைந்துள்ளது.

இந்த நிலையில், ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஆந்திராவில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடிகராக சித்துவும், நடிகையாக நேஹா ஷெட்டியும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சில கிலு கிலு காட்சிகள் இருப்பது உறுதி என்பது, டிரெயிலரில் உள்ளது.

djtullu

இந்த நிலையில், ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர், நடிகை இருவரும் கலந்துகொண்டனர். அப்போது, படத்தின் கதாநாயகன் சித்துவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல், நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று சினிமா பத்திரிகையாளர் சுரேஷ் கொண்டேத்தி கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.

இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், நிஜ வாழ்க்கையிலும் அவரது மச்சங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா? என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ந்துபோன சித்து, எந்த பதிலும் அளிக்கவில்லை.

djtullu

இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நேஹா ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால் தனது கேள்வியை நியாயப்படுத்திய சுரேஷ், ‘நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it