ஒரே கம்பெனியில இத்தனை ஆண்டுகளாக வேலையா?- 100 வயது தாத்தாவின் சாதனை !
ஒரே கம்பெனியில இத்தனை ஆண்டுகளாக வேலையா?- 100 வயது தாத்தாவின் சாதனை !

தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரையும் வியக்கவைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 100 வயதான முதியவர். அப்படி என்ன சாதனை என கேட்டால் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்துக்கு சென்றுவந்ததே அந்த சாதனை.
அதாவது, பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மேன். 100 வயதான இவர், தமது இளம் வயதில் துணி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து அந்த நிறுவனத்தில் நிர்வாக பதவிக்கு வந்து, இறுதியில் விற்பனை மேலாளராக உயர்ந்தார்.
எந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாரோ அதே நிறுவனத்தில் தொடர்ந்து 84 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நவீனகால பணி சூழலில் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 அல்லது 10 ஆண்டுகள் பணிபுரிவதே சவாலான விஷயமாக இருக்கும்போது, 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் ஆர்த்மேன்.
இந்த சாதனை குறித்து அவர் தனது நூறு வயதிலும் ஆர்க்மேன் உற்சாகமாக பேசுகிறார். அப்போது, மனதுக்கு விரும்பமானதை செய்து, துரித உணவுகளை தவிர்த்தால், நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை சாத்தியம் என்று தமது வெற்றியின் ரகசியத்தை இந்த கால இளைஞர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
newstm.in