நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்.. தந்தை இறந்த துக்கத்தில் மகன் எடுத்த பகீர் முடிவு !!
நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்.. தந்தை இறந்த துக்கத்தில் மகன் எடுத்த பகீர் முடிவு !!

உலகில் விலை கொடுத்து வாங்க முடியாத சிம்மாசனம் தந்தையின் தோள்கள்.. அப்படி தோள் மீது போட்டுவளர்த்த தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (27). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ராஜ் குமார் தனது தந்தையுடன் மிகவும் இணக்கமாகவும் பாசமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ராஜ்குமாரின் தந்தை சேட் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது குடும்பத்தில் பெரும் இடியாக அமைந்தது. மேலும் தந்தை இறந்த மனவேதனையில் இருந்த ராஜ்குமார் வீட்டில் இருந்து பேருந்து மூலம் புதுச்சேரிக்கு வந்தார். அங்கு உறவினர்கள் வீட்டிற்கு செல்ல இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த உறவினர்கள், ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜ் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

