நெஞ்சை பிளக்கும் சோகம்.. உக்ரைனில் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் காவல்காக்கும் நாய் !!

நெஞ்சை பிளக்கும் சோகம்.. உக்ரைனில் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் காவல்காக்கும் நாய் !!

நெஞ்சை பிளக்கும் சோகம்.. உக்ரைனில் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் காவல்காக்கும் நாய் !!
X

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது ஏஜமானர் அருகே நாய் படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 41 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது. எனினும் ரஷ்யாவின் ஏவுகணை, குண்டு மழையில் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தப்பித்து நிற்கும் கட்டிடங்களில் குடியேற முடியாத நிலையும் உள்ளது.

ukraine people

அதேநேரத்தில், ஏராளமான உக்ரைன் மக்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளும் கொல்லப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளது. இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், வீதிகளில் சடலங்கள் கிடப்பதாக வெளிவரும் தகவல்கள் நெஞ்சை உலுக்கும் அளவுக்குசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ukraine people

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றிருக்கின்றனர். உக்ரைன் தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்ட தன் எஜமானர் உடலின் அருகே நாய் ஒன்று காவல்காத்த நிலையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it