Theme Check

சென்னையில் இன்று இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. பெரியமேடு பகுதியில் கடைகள் திறக்க தடை..!

சென்னையில் இன்று இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. பெரியமேடு பகுதியில் கடைகள் திறக்க தடை..!

சென்னையில் இன்று இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. பெரியமேடு பகுதியில் கடைகள் திறக்க தடை..!
X

தமிழகத்தில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (26-ம் தேதி) மாலை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரவுள்ளார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார். பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் இன்று இரவு முதல் நாளை இரவு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் பெரியமேடு பகுதி முழுவதும் குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it