கொட்டும் கனமழை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொட்டும் கனமழை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மழையினால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, தொடர் மழையால் பள்ளிகூடங்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், கனமழை சமயங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் மாணவ-மாணவிகள் வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் கொண்டும் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
newstm.in

