Theme Check

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!
X

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain 1

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

rain 1

அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திடீர் என பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டாலும் சில இடங்களில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it