இடி, மின்னலுடன் கனமழை.. 4 பேர் உயிரிழப்பு !!
இடி, மின்னலுடன் கனமழை.. 4 பேர் உயிரிழப்பு !!

பலத்த காற்றுடன் திடீரென பெய்த கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்குப் பகுதியில் நேற்று மாலையில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த இடியுடன் இடித்தது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், சூறாவளி, இடியுடன் பெய்த இந்த கனமழைக்கு நான்கு பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புர்பா பர்தமான் மாவட்டத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நாடியா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கொல்கத்தாவின் ரவீந்திர சரோபார் ஏரியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள மகாநாயக் உத்தம் குமார் மற்றும் நேதாஜி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
Newstm.in

