Theme Check

கடும் வெயில்.. எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.200 ஆக உயர்வு !!

கடும் வெயில்.. எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.200 ஆக உயர்வு !!

கடும் வெயில்.. எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.200 ஆக உயர்வு !!
X

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால் எலுமிச்சை, தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒருகிலோ எலுமிச்சை பழம் விலையை கேட்டாலே சூடாகும் சூழல் உருவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதிக்கு வரத்து பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது. ரூ50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது கிலோ ரூ.200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Lemon-water

எலுமிச்சை பழத்தின் விலை கிலோ ரூ.200-ஐ தொட்டது. வெப்பநிலை அதிகரிக்கும் போது ​​மக்கள் அதிகம் தேடும் பழங்களில் ஒன்றாக எலுமிச்சை உள்ளது. ஏனெனில் அவை வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. எலுமிச்சை பழம் வரத்து குறைவால் எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

எலுமிச்சை பழம் திடீர் விலை ஏற்றத்தால் குறைந்த அளவிலேயே வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதால், விலை ஏற்றம் வியாபாரிகளையும் பாதித்துள்ளது.

newstm.in

Next Story
Share it