ஹலோ போலீஸ் மூலம் 4 ஆண்டுகளுக்கு பின் பெண் மீட்பு!!
ஹலோ போலீஸ் மூலம் 4 ஆண்டுகளுக்கு பின் பெண் மீட்பு!!

ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பேச்சியம்மாள் (60) ஹலோ போலீஸ் எண் தகவல் மூலம் கர்நாடகாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஹலோ போலீஸ் 83000 31100 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் சித்தாபூரில் உள்ள தனியார் ஆதரவற்றவர் ஆசிரமத்திலிருந்து அழைப்பு வந்தது.
அப்போது சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வேலாயுதபுரம் பேச்சியம்மாள் தங்கியுள்ளதாக கூறினர்.
இதனையடுத்து எஸ்.எஸ்.ஐ., ஆசைதம்பி சாயல்குடியில் விசாரித்தார்.

அதில், பேச்சியம்மாள் மகன் முனீஸ்வரனிடம் புகைப்படத்தை காட்டி 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவர் தான் என்பதை உறுதி செய்தனர். உறவினர்களுடன் கர்நாடக ஆசிரமத்திற்கு போலீசார் சென்று பேச்சியம்மாளை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
பொது மக்கள் மணல் கடத்தல், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத புகார்களை ஹலோ போலீஸ் எண்,87782 47265 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என எஸ்.பி., கார்த்திக் தெரிவித்துள்ளார்.
newstm.in

