Theme Check

கருணாநிதி சிலையை வைக்க இருந்த தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்..!!

கருணாநிதி சிலையை வைக்க இருந்த தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்..!!

கருணாநிதி சிலையை வைக்க இருந்த தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்..!!
X

வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வேங்கைக்கால் பகுதியில் 1992-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

MK-karunanidhi

இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

Karunanidhi

பின்னர், பட்டாவை எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக திருவண்ணாமலையில் குறிப்பிட்ட அந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது.

Next Story
Share it