தமிழ் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்..!!

தமிழ் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்..!!

தமிழ் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்..!!
X

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் தமிழ் திரைப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

‘உயர்ந்த மனிதன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும், தமிழ்வாணன் என்பவர் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
Uyarndha Manithan Official First look | SJ Surya & Amitabh Bachan | Neeya2  Update | Theal Movie - YouTube
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் திடீரென இந்த படம் நிறுத்தப்பட்டது. தயாரிப்பு தரப்புக்கும் அமிதாப் பச்சனுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது, பழைய தயாரிப்பாளர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும், புதிய தயாரிப்பாளருடன் இந்த படம் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'உயர்ந்த மனிதன்'-மீண்டும்  படப்பிடிப்பு துவக்கம் | SJ Suryahs Tamil Hindi bilingual with Amitabh  Bachchan to be revived ...
இதுகுறித்த முறையான அறிவிப்பை ஊடகங்கள் மூலம் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் அமிதாபச்சன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன் தந்தையாகவும், எஸ்.ஜே.சூர்யா மகனாகவும் நடிக்கவுள்ள இந்த படம் தமிழில் ’உயர்ந்த மனிதன்’ என்ற பெயரிலும், ஹிந்தியில் ‘தி கிரேட் மேன்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it