ரஷ்யா தாக்குதலில் உயரிய விருதுபெற்ற உக்ரைன் நடிகை உயிரிழப்பு !!
ரஷ்யா தாக்குதலில் உயரிய விருதுபெற்ற உக்ரைன் நடிகை உயிரிழப்பு !!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த தாக்குதலை கண்டித்து, ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஏராளமான நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன.
எனினும், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் குறைந்தபாடில்லை. உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. எனினும் தற்போது குண்டு, ஏவுகணை மழை பொழிவாதால் உக்ரைன் குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (67) உயிரிழந்து உள்ளார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை உறுதி செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் உயரிய விருது பெற்ற நடிகையாகவும் ஓக்சானா இருந்து வந்துள்ளார்.
ரஷ்ய படைகள் தாக்குதலில் பிரபல நடிகை கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
newstm.in