Theme Check

கருணாநிதி சிலை வைக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கருணாநிதி சிலை வைக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கருணாநிதி சிலை வைக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
X

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், வேங்கிக்கால் பகுதியில் கருணாநிதியின் சிலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

அதே சமயம், இது குறித்து தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் பதில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story
Share it