Theme Check

ஹிஜாப் விவகாரம்.. பாஜக பூத் ஏஜென்ட் செய்தது சரிதான்.. மாஜி அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி..!

ஹிஜாப் விவகாரம்.. பாஜக பூத் ஏஜென்ட் செய்தது சரிதான்.. மாஜி அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி..!

ஹிஜாப் விவகாரம்.. பாஜக பூத் ஏஜென்ட் செய்தது சரிதான்.. மாஜி அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி..!
X

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல் அமீன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் என்பவர் அகற்றக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், “மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை. ஹிஜாப்பை நீக்கச் சொல்வது நோக்கம் அல்ல. மாறாக, சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம். இதில் என்ன தவறு இருக்கிறது..?” என்று, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக நிர்வாகி ஒருவர் இல்ல விழாவில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“மதுரை மேலூர் வாக்குச் சாவடி பாஜக முகவர் கிரிராஜன் செய்ததில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஹிஜாப்பை நீக்கச் சொல்வது நோக்கம் அவர் அல்ல; மாறாக, சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது..?

எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா..? அல்லது, நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து சென்றால் ஏற்றுக்கொள்வார்களா..? பாஜக முகவர் தன்னுடைய கடமையைத்தான் செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Next Story
Share it