Theme Check

வாக்குப்பதிவில் ஹிஜாப் உடை சர்ச்சை.. பாஜக முகவர் சிறையில் அடைப்பு !!

வாக்குப்பதிவில் ஹிஜாப் உடை சர்ச்சை.. பாஜக முகவர் சிறையில் அடைப்பு !!

வாக்குப்பதிவில் ஹிஜாப் உடை சர்ச்சை.. பாஜக முகவர் சிறையில் அடைப்பு !!
X

ஹிஜாப் உடை சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பாஜக முகவரை மேலூர் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8ஆவது வார்டு வாக்குபதிவு மையத்தில் ஹிஜாப் உடை அணிந்து இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க சென்றார். அப்போது, இஸ்லாமிய பெண் வாக்காளரிடம் ஹிஜாப்பை விலக்குமாறு பாஜக முகவர் கிரிநந்தன் கூறியுள்ளார்.

இதற்கு அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட மற்றகட்சி வேட்பாளர்களின் முகவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். தோ்தல் அலுவலா்களும் பாஜக முகவரின் செயல்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வெளியேற வலியுறுத்தினா். மேலும் தோ்தல் பணியை தொடர மாட்டோம் என்றனா்.mdu vote
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசாா், முகவா் கிரிநந்தனை வெளியே அழைத்துவந்தனா். இதனைத் தொடா்ந்து, நிறுத்தப்பட்டிருந்த வாக்குப்பதிவு அரைமணி நேரத்துக்குப் பின் மீண்டும் தொடா்ந்தது.

இதனிடையே, ஒரு மணி நேரத்துக்குப் பின்னா், கிரிநந்தன் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்தாா். இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய காவலா்கள் அங்கிருந்து அழைத்துச் சென்று கைது செய்தனா். கிரிநந்தனை மேலூர் காவல் துறையினர் , மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை வருகிற நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் மேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை மேலூர் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it