Theme Check

ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு..!

ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு..!

ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு..!
X

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; “உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று ஹிந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது.
Hindi should be accepted as an alternative to English: Amit Shah - Edules
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட ஹிந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஹிந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it