Theme Check

சலூன் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற இந்து முன்னணி பிரமுகர்!!

சலூன் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற இந்து முன்னணி பிரமுகர்!!

சலூன் கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற இந்து முன்னணி பிரமுகர்!!
X

கோவையில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

செல்வபுரம் பகுதியில் சசிகுமார் (35) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். சசிகுமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகர துணைத்தலைவர் ராம் என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சசிகுமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து கதவை திறந்த சசிகுமாரை வெளியே நின்றிருந்த ராம் உள்ளிட்ட 2 பேர் உன்னிடம் பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றனர்.

cbe murder

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகுமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றது. சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

arrest

முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலையை இந்து முன்னணி பிரமுகர் ராம், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it