இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.. சாமியார்கள் ஆலோசனை !!
இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.. சாமியார்கள் ஆலோசனை !!

வடமாநிலங்களில் ராமநவமி திருவிழாவையொட்டி பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்து அமைப்பினர் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், பீகார்,, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த வன்முறை வெடித்தது.
அண்மையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஊர்வலத்தில் பேசிய சாமியார் ஒருவர், இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடந்து கொண்டால், அவர்களது பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன், என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகார் செய்து 11 நாட்களான பிறகே அச்சாமியாரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.

தற்போது மீண்டும் மற்றொரு சாமியார், இந்தியா இஸ்லாமிய நாடாகாமல் தடுக்க இந்துக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட சாமியார் எதி சத்யதேவானந்த் பேசுகையில், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க இந்துக்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்துக்கள் அதிகமாக இருந்தால்தான் இந்தியா இந்து பூமியாக இருக்கும், எனத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாமியாருக்கு விளக்கம் கேட்டு இமாச்சல் பிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
newstm.in

