Theme Check

தமிழகத்தில் நாளை இவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை இவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை இவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!
X

தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (23-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it