போரை நிறுத்த வேண்டும்- உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் !!

போரை நிறுத்த வேண்டும்- உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் !!

போரை நிறுத்த வேண்டும்- உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் !!
X

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தவேண்டும் என ஹாலிவுட் மூத்த நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களை முதலில் தாக்கிய ரஷ்ய படைகள் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் மீதும் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என பல்வேறு நாடுகள், பிரபலங்கள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

russia attack

அந்த வகையில், ஹாலிவுட் மூத்த நடிகரும் அமெரிக்காவின் கலிபோர்னியா முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்யாவுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, எனது அன்பான ரஷ்ய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷ்ய வீரர்களுக்கு சென்று அடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன்.

உலகில் நடக்கும் விஷயங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இருப்பதால், நான் உங்களிடம் பேசுகிறேன். உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றிய உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

russia attack

ரஷ்யா படையெடுப்பு 141 நாடுகளால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளால் உலகமே ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிவது, உலகை சீற்றம் அடையச் செய்துள்ளது.

உலகப் பொருளாதாரத் தடைகள் உங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷ்யாவைக் காப்பதற்கான போர் அல்ல.இது சட்டவிரோதமான போர். இந்த ஒளிபரப்பைக் கேட்கும் ரஷ்ய வீரர்களுக்கு, நான் பேசும் உண்மை தெரியும். நீங்கள் அதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறீர்கள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it