Theme Check

ஹோட்டலில் விபச்சாரம்.. டிவி நடிகை உட்பட 3 பெண்கள் மீட்பு.. புரோக்கர் கைது..!

ஹோட்டலில் விபச்சாரம்.. டிவி நடிகை உட்பட 3 பெண்கள் மீட்பு.. புரோக்கர் கைது..!

ஹோட்டலில் விபச்சாரம்.. டிவி நடிகை உட்பட 3 பெண்கள் மீட்பு.. புரோக்கர் கைது..!
X

கோவாவில், பிரபலமான பெண்களை ஈடுபடுத்தி விபச்சாரம் நடந்து வருவதாக அங்குள்ள குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, வாடிக்கையாளர் போல் ஒருவரை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர்.

இதில், ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஹபீஸ் சையது பிலால் (26) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவது தெரியவந்தது.

போலீசார் அனுப்பிய நபர் அவரை அணுகியபோது, 50 ஆயிரம் ரூபாய் பேசி வடக்கு கோவா சாங்கோல்டா கிராமத்தில் உள்ள ஹோட்டலுக்கு வரும்படி தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, ஹபீஸ் சையது பிலால் தன்னுடன் 3 பெண்களை அந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தார்.

இதைக்கண்ட போலீசார் உடனே அவரை மடக்கி பிடித்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக வந்த 30 முதல் 37 வயதுடைய 3 பெண்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் 3 பேரும் மும்பையை அடுத்த விரார், தானேயில் வசித்து வருவது தெரியவந்தது. இதில் ஒரு பெண் மும்பையைச் சேர்ந்த டி.வி. நடிகை என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபச்சார தொழில் நடத்தி வந்த ஹபீஸ் சையது பிலாலை கைது செய்தனர்.

Next Story
Share it