அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! நல்லெண்ணெய், கடலை எண்ணெய் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்வு..!!
அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! நல்லெண்ணெய், கடலை எண்ணெய் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்வு..!!

தேனி, சேலம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்கள், 60 சதவீதம், கர்நாடகா, ஆந்திரா, 40 சதவீதம் என, தமிழக நிலக்கடலை தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதன் அறுவடை முடிவுக்கு வந்ததால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருவது சரிந்தது.

இதன் காரணமாக, நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. இதன் எதிரொலியாக விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.
விருதுநகரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280-க்கும் கடலை எண்ணெய் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.130-க்கும் சூரியகாந்தி எண்ணெய்ரூ.175-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 15 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.2,900-க்கும், நல்லெண்ணெய் ரூ.4,868-க்கும், பாமாயில் ரூ. 2,040-க்கும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

