இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! ஒரு எலுமிச்சை 15 ரூபாயா..?
இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! ஒரு எலுமிச்சை 15 ரூபாயா..?

கோடை காலம் மக்களை வாட்டி வதைக்கிறது. எலுமிச்சை பழம் கிலோ சுமார் ரூ.250-க்கு விற்கப்பட்டதால், மக்கள் விழி பிதுங்குகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில், வெப்ப நிலை ஏறுமுகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஷியசை எட்டியுள்ளது. தீயாய் சுடும் வெயிலிலிருந்து தப்பிக்க, மக்கள் எலுமிச்சைப்பழம் சாறு அருந்துகின்றனர். பயன்பாடு அதிகரித்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது.இதற்கு முன் சில்லரை மார்க்கெட்டில், 10 ரூபாய்க்கு மூன்று - நான்கு எலுமிச்சை பழங்கள் கிடைத்தன.தற்போது ஒரு பழத்தின் விலை 10-15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுபோன்ற வெயில் காலத்தில் எலுமிச்சை பழம் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுவது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று காய்கறி வாங்கச் சென்ற மக்கள் புலம்பி வருகின்றனர். எலுமிச்சை பழம் விலை உயா்வால் ஜூஸ் கடைகளில் ஒரு ஜூஸ் ரூ.10க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

