Theme Check

இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்.. வெளியான சூப்பர் அறிவிப்பு !!

இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்.. வெளியான சூப்பர் அறிவிப்பு !!

இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்.. வெளியான சூப்பர் அறிவிப்பு !!
X

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ‘’வேருக்கு விழா’’ என்ற தலைப்பில் இல்லற இணையரங்கம் நிகழ்ச்சி சென்னை அடுத்த ஓட்டேரியில் நடைபெற்றது. இதில் 9 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

marriage

இதில், பேசிய ஆர்.எஸ்.பாரதி, இது ஒரு மகிழ்ச்சியான விழா. 9 பேருக்கு திருமண நிகழ்ச்சி, வசதியற்றவர்களுக்கு உரிய முறையில் திருமணம் நடந்திருக்கிறது. 9 பேருக்கு தாலி எடுத்து கொடுத்தேன். சுயமரியாதை மற்றும் வைதீக திருமணம் இரண்டும் கலந்து இங்கு நடந்துள்ளது. கலைஞர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவன் நான்.

என் பிள்ளைகளும் கலைஞர் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்கள். சுயமரியாதை திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த திருமணங்கள் எடுத்துரைக்கிறது. பெண்களின் திருமண வயதை உயர்த்தியவர் பெரியார். இப்போது, ஒவ்வொரு பெண்ணும் படிக்க மாதம் 1000 ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

marriage

பெண்கள் படிப்பு முடித்து யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு முறையில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிந்து கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின் அண்ணா அல்லது கலைஞர் பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும், என்றார்.

newstm.in

Next Story
Share it