மாணவிகளை காம வலையில் வீழ்த்தியது எப்படி? - கைதான டியூசன் ஆசிரியர் பகீர் வாக்குமூலம் !!
மாணவிகளை காம வலையில் வீழ்த்தியது எப்படி? - கைதான டியூசன் ஆசிரியர் பகீர் வாக்குமூலம் !!

40 வயதில் காதல் வேட்டை நடத்தி 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சேலம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(40). அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 2019ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 11ஆம் வகுப்பு படிக்கும் தனது 16 வயது மகளை கணித பாடம் கற்றுக்கொடுக்கும்படி மணிமாறனிடம் டியூசனுக்கு அனுப்பியுள்ளார். அந்த மாணவியிடம் மணிமாறன் தனது மன்மத சேட்டையை காட்டினார். இதையடுத்து தனது வலையில் சிக்கிய அந்த மாணவியை மணிமாறன் கடத்தி சென்றார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றிய மணிமாறன் போலீசார் கண்களில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார். பின்னர் அந்த மாணவியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கு சென்றார்.அங்கு இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகளான 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவியை மணிமாறன் காதல் வலை வீசி மயக்கினார். அந்த மாணவியையும் கடத்தி மணிமாறன் தலைமறைவானார்.
இதற்கிடையே கல்லூரி மாணவி காணாததால் அவரின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சுசீந்தரம் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அந்த 2 மாணவிகளையும் கடத்திய மணிமாறன் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் மணிமாறன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படையினர் திருப்பதி சென்று மணிமாறனை நேற்று முன்தினம் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.

மணிமாறன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, மணிமாறனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்த நான், சிறுமியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டேன். ஒரு நாள் மாணவியிடம் நாம் எங்காவது சென்று விடலாம் என்றேன். அவரும் சம்மதித்தார். வரும்போது நகைகளை எடுத்து வர கூறினேன். அவரும் வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகை, ரூ.1½ லட்சம் பணம் எடுத்து வந்தார்.
கன்னியாகுமரி சுசீந்தரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தேன். அப்போது அவர்களிடம் இது எனது அக்கா மகள். அவர்கள் இறந்து விட்டதால் நான் தான் கவனித்து கொள்கிறேன், என தெரிவித்தேன். இதனிடையே, அந்த வீட்டின் உரிமையாளரின் மகளான கல்லூரி மாணவி சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டினர். இதனை பயன்படுத்தி, மாணவிக்கு ஆறுதல் கூறுவதுபோல் நடித்து நெருக்கம் காட்டினேன். பின்னர் ஒருநாள் அந்த மாணவியிடம், நாம் வெளிமாநிலம் சென்று ஊர் சுற்றி பார்க்கலாம் என கூறி அவரையும், சிறுமியையும் பல இடங்களுக்கு அழைத்து சென்றேன்.

கல்லூரி மாணவி வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்து வந்திருந்தார். அதை வைத்து செலவு செய்தோம். எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பதிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கினோம். கல்லூரி மாணவி கொண்டு வந்த பணம் தீர்ந்து போனதால், வாடகை செலுத்த முடியாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி மாணவியை சைக்கிளில் சென்று டீ விற்று வருமாறு தெரிவித்தேன். முதலில் மறுத்தார். பின்னர் அவரை பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக மிரட்டி அடிபணிய வைத்தேன். ஆனால், யாரிடமோ செல்போன் வாங்கி அவரது நண்பரிடம் பேசியதால் தான் போலீசில் சிக்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

