இளம்பெண் தலைமையில் போதை கும்பல் செயல்பட்டது எப்படி? - வெளியான பரபரப்பு தகவல்கள் !!
இளம்பெண் தலைமையில் போதை கும்பல் செயல்பட்டது எப்படி? - வெளியான பரபரப்பு தகவல்கள் !!

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் சில நாட்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் என்பவர் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டிருந்தார்.
சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, போதை தரும் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் அதிகமாக இருந்தன. இதையடுத்து போலீசார் கிஷோரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் பூங்குன்றன், கோகுல், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி , முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களுடன் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை மாத்திரை விற்பனை கும்பலுக்கு இளம் பெண் ராஜலட்சுமி என்பவர் தான் மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாகத் தெரியவந்தது. மேலும் அவர் கருவைக் கலைப்பதற்கான மாத்திரையையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும், போதை மாத்திரைகளை ஆந்திராவிலிருந்து கொரியர் மூலம் வரவழைத்து இணையத்தில் தங்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்கி, அதில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். அதேபோல், போதை மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருக்கமான நண்பர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து இக்கும்பல் மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளது. கிட்டதட்ட தனி திட்டம்போட்டு திரைப்பட பாணியிலேயே இக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த கும்பலுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. முகம் தெரியாத நபர்களும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். சென்னை மாநகரை பொருத்தமட்டில் கூகுள் பே மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு, மாத்திரைகளை நேரடியாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், ஐபேடு, 2 லேப்டாப்புகள், 3 இருசக்கர வாகனங்கள், 6,625 போதை ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

