Theme Check

42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? - குவியும் வாழ்த்துகள் !

42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? - குவியும் வாழ்த்துகள் !

42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? - குவியும் வாழ்த்துகள் !
X

கேரளாவைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே அதிரம்புழா பகுதியில் பிரசன்னா குமாரி - சுரேஷ் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதில் மனம் தளர்ந்திருந்த இந்தத் தம்பதி, கோட்டயத்தில் உள்ள மகப்பேறு மருத்துவர்களை அணுகியிருக்கின்றனர். அவர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறை இந்த தம்பதிக்கு பலன் அளித்துள்ளது.

அதாவது, செயற்கை கருவூட்டல் சிகிச்சை மூலம் பிரசன்னா குமாரி கருவுற்றிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன் அதே மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது.
pergnant
அதில் பிரசன்னா குமாரி 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். தனது முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய், தனது 4 குழந்தைகளுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்காக பல ஆண்டுகள் ஏங்கியிருந்த தம்பதிக்கு, தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்ததன் மூலம் அக்குடும்பத்தினர் பெரும் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

அக்குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பிரசன்னா குமாரி - சுரேஷ் தம்பதி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it