Theme Check

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்? - சுகாதாரத்துறை அமைச்சகம் கோரிக்கை !

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்? - சுகாதாரத்துறை அமைச்சகம் கோரிக்கை !

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்? - சுகாதாரத்துறை அமைச்சகம் கோரிக்கை !
X

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால், அனைத்து மாநிலங்களும் போட்டிப்போட்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டன. இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 180 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

vaccine

இதில் 96.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 86.21 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா குறைந்து வருவதால் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அலட்சியப்படுத்தாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it