எவ்வளவு மின்சாரம்! என்ன கட்டணம்!! இனி ஆப்ல தெரியும்!!
எவ்வளவு மின்சாரம்! என்ன கட்டணம்!! இனி ஆப்ல தெரியும்!!

வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியை மின் நுகர்வோர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கட்டணம் கணக்கீடு செய்யலாம். மின் கட்டண ரசீது மின் பயனர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.
பரிசோதிக்கப்பட்ட 27 பகுதிகளில் இந்த செயலி சரியாக செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. மின் பயனர்கள் இனி மின் கணக்கீட்டாளர் களுக்குக்காக காத்திருக்காமல் தாங்களாகவே கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.

இந்த செயலி சரியாக செயல்படுவதால் சென்னை மற்றும் வேலூரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதிதான் இந்த செயலி.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் வீண் விரயம் கால வியரம் தவிர்க்கப்பட்டு பல்வேறு நிலையில் நஷ்டம் குறையும் என்றும் கூறுகின்றனர்.
சென்னை மற்றும் வேலூரில் செயலியை பயன்படுத்த கணக்கீட்டாளர்கள் கேட்டுக்கொள்ள பட்டதாகவும் டேன்ஜெட்கோவின் உயர் அதிகாரி தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
newstm.in

