அடக்கொடுமையே..!! 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் பலி ..?
அடக்கொடுமையே..!! 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் பலி ..?

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த திவ்யா (30), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் திவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து திவ்யா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு ஜெகனுடன் சேர்ந்து மதுரை மாவட்டம் அய்யூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜெகனின் நண்பர் பழனி என்பவர் திவ்யாவின் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா ஜெகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தையை தூக்கி வீசியதோடு கண்மூடித்தனமாக ஜெகன் தாக்கியுள்ளார். இதனால் சுயநினைவை இழந்த குழந்தையை மூவரும் தூக்கிக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது வழியிலேயே குழந்தையைப் பேச்சு மூச்சை இழந்தது.
இதனால் அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி திருச்சியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த குழந்தையின் உடலை கூட பெறாமல் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த தாய் திவ்யா, அவரது கள்ளக்காதலன் ஜெகன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

