Theme Check

அடக்கொடுமையே..!! ஆற்றில் வீசப்பட்ட தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை..!!

அடக்கொடுமையே..!! ஆற்றில் வீசப்பட்ட தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை..!!

அடக்கொடுமையே..!! ஆற்றில் வீசப்பட்ட தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை..!!
X

கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதப்பதை கண்டுள்ளனர்.

Kumbakonam

உடனடியாக அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு கரையோரத்தில் எடுத்துவந்து பார்த்தபோது, ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், யாரோ ஆற்றில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் ஆண் குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

baby

பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக ஆற்றில் கிடந்தது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it