Theme Check

பசிக்குது.. உணவு கேட்ட குழந்தைக்கு சூடுவைத்த வளர்ப்புத் தாய் !

பசிக்குது.. உணவு கேட்ட குழந்தைக்கு சூடுவைத்த வளர்ப்புத் தாய் !

பசிக்குது.. உணவு கேட்ட குழந்தைக்கு சூடுவைத்த வளர்ப்புத் தாய் !
X

உணவு கேட்ட குழந்தைக்கு கையில் பட்டைப் பட்டையாக சூடு வைத்த வளர்ப்புத் தாயின் கொடூரச் செயல் அனைவரின் நெஞ்சையும் பதறவைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த திப்பண்ணா என்பவரின் முதல் மனைவி இறந்துவிட்டதால், அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த 5 வயது சிறுமியை இரண்டாவது மனைவியிடம் விட்டுவிட்டு வேலை நிமித்தமாக புனே சென்றுவிட்டார் திப்பண்ணா.

இதையடுத்து, அப்பெண், 5 வயது குழந்தையை கடுமையாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார், காலையில் குழந்தை உணவு கேட்டு அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், குழந்தையின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் குழந்தையை கட்டிலுடன் சேர்த்து கட்டிவைத்துள்ளார்.

police

தொடர்ந்து அழுகுரல் கேட்டதால் பக்கத்து வீட்டு பெண் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கட்டிலுடன் சேர்த்து கட்டிவைத்த குழந்தையின் கைகளில் சூடு வைக்கப்பட்டு, வேதனையில் குழந்தை துடிதுடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் காவல்நிலையம் சென்றுள்ளார்.

police

பின்னர் குழந்தையை சித்திரவதை செய்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவலர்கள் கூறுகையில், வளர்ப்புத் தாய் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it