கணவன், மனைவி அடித்துக் கொலை… கடன் கொடுத்தவர்கள் காரணமா?
கணவன், மனைவி அடித்துக் கொலை… கடன் கொடுத்தவர்கள் காரணமா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு நெசவு தொழில் செய்து வரும் கணவன், மனைவி ஆகியோர் அரக்கோணம் அருகே முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஞ்சை அரசன் தங்கள் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (52) - ராணி (45) தம்பதி பட்டு நெசவு தொழில் செய்து வந்தனர். இவர்கள் தொழிலுக்காக தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தனர். இந்நிலையில் கடனை திருப்பித்தர தாமதமானகால் கடன் கொடுத்தவர்கள் தம்பதியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரக்கோணம் அருகே சாலை மில்லன் ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் இருவரும் கொலை செய்யப்பட்டு அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் தம்பதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட ராணி அரக்கோணம் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மின்னல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மின்னலான் என்பவரின் சகோதரி ஆவார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

