பெரம்பலூரில் ஒரே வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் கணவன் மனைவி..!!
பெரம்பலூரில் ஒரே வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் கணவன் மனைவி..!!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த வகையில் ஒவ்வொரு நகராட்சியிலும் மாணவிகள், பெண்கள், திருநங்கைகள் என்று வேட்பாளர்கள் களம் இறங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியின் 20-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுவதற்க சுரேஷ் தனது மனைவி இளமதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே வார்டில் கணவன், மனைவி போட்டியிடுவது பெரம்பலூர் நகராட்சியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

