மனைவியை தம்பிள்சால் அடித்துக் கொன்ற கணவன்!!
மனைவியை தம்பிள்சால் அடித்துக் கொன்ற கணவன்!!

சிவகங்கை ரயில் நிலையம் அருகே எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மார்க் ஆண்டனி (42) – கற்பகம் (32) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கரிமூட்டம் போடும் தொழில் செய்துவந்த மார்க் ஆண்டனி கர்நாடகாவில் பணியாற்றிவந்துள்ளார்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊர் வரும் மார்க் ஆண்டனி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுப்படுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அத்துடன் மனைவி மீது சந்தேகமடைந்த ஆண்டனி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அவரின் சந்தேக வெறி ஒருகட்டத்தில் மனைவி, மகன் மீதே சந்தேகப்படும் அளவிற்கு சைக்கோ மனநிலைக்கு சென்றது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த தகராறில் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்து மூத்த மகனை தனியாக வசிக்கவைத்தனர்.

இந்நிலையில் ஆண்டனி மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்தவர் வீட்டில் இருந்த சுத்தியலாலும் தம்பிள்சாலும் மனைவி தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கற்பகம் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மார்க் ஆண்டனியை பிடித்து சிவகங்கை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைபற்றி மார்க் ஆண்டனியை கைது செய்தனர்.
newstm.in

