மனைவிக்கு வீடியோ அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை!!
மனைவிக்கு வீடியோ அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இவருக்கும் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கல்பனாவுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆறு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராஜேஷ் தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ராஜேஷுடன் சேர்ந்து வாழ கல்பனா மறுத்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ராஜேஷ் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதிக்கு வந்தார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி கல்பனாவுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார்.
முதலில் எலி மருந்து குடித்தும் பின்னர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொளுத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றள்ளார். சாலையில் சென்ற பொதுமக்கள் எரிந்த நிலையில் கிடந்த ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

